திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு:

0
D1

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு:

புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபட முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி என்று ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் அறிவித்துள்ளார்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றுப்படுவதும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். கொரோனா பரவல் காரணமாக வழிப்பாட்டு தலங்களில் பக்தர்களுக்கு வழிபாடு செய்ய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு 300 பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர்.

D2
N2

இந்த கோவிலில் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் அதிக அளவிலான பக்தர்கள் பெருமாளை தரிசிக்க வருவது வழக்கம். எனவே இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் வழிபட வரும் பக்தர்கள் கோவிலின் இணையதளத்தின் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும், முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண தரிசனத்திற்கு மட்டுமின்றி கட்டணமில்லா தரிசனத்திற்கும் கோவில் இணையத்தில் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதிவிற்கு www.srirangam.Org என்கிற இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

 

 

N3

Leave A Reply

Your email address will not be published.