திருச்சி பிட்ஸ்…..

0
Business trichy

புரட்டஸ்டண்ட் கிறிஸ்தவப் பிரிவை சேர்ந்த பாரதிரியார் சுவார்ட்ஸ் 1762ல் திருச்சிக்கு வந்து எஸ்.பி.கே.மிஷன் மூலம் 15 ஆண்டுகள் கல்வி மற்றும் சமூகப் பணிகளைச் செய்தார்.
கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடந்த 1957ம் ஆண்டு குளித்தலை தாலுகா,குமாரமங்கலத்தில் தொடங்கப்பட்ட கரும்பு ஆராய்ச்சி நிலையம் பின்னர் வடிகால் வசதிக்காக 1959ம் ஆண்டு சிறுகமணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
திருச்சி வானொலி நிலையம் 1939ம் ஆண்டு மே மாதம் 17ம் தேதி அன்றைய சென்னை மாகாண முதலைமைச்சர் சி.ராஜகோபாலாச்சாரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்திய சுதந்திரப் போரட்டத்தின் போது திருச்சியில் முக்கிய பங்கு வகுத்த திருச்சி நா.ஹலாஸ்யம் அய்யரின் மகள் வாலம். இவர் 1922ம் ஆண்டு பிறந்தவர். வாலாம்பாள் என்கிற வாலம் .சிறந்த கவிஞராகவும், பேச்சாளராகவும்,பத்திரிக்கையாளராகவும் வலம் வந்தவர்.
1913 ஜனவரி 23ம் தேதி திருச்சியில் பிறந்தவர் நீலாவதி திராவிடன் குடியரசு ,ஊழியன் முதலிய பத்திரிக்கைகளில் சீர்த்திருத்தக் கருத்துக்களை தம் இளைமைக் காலத்திலேயே எழுச்சியுடன் எழுதியவர்.
மன்னர் குடும்பத்தில் பிறந்து ராஜபரிபாலனை செய்திருந்தாலும் மிகச் சாதாரண மனிதராக இறுதி காலத்தில் வாழ்ந்து வந்த ராஜகோபல தொண்டைமான் 1997ம் ஆண்டு மறைந்தார் இவரது மருமகள் சாருபாலா திருச்சி மாநகராட்சியின் மேயராக இரண்டுமுறை இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
1953 ம் ஆண்டு தி.மு.க இந்தி எதிர்ப்பு போராட்டத்தை தீவிரமாக நடத்தியது .இதன் ஒரு பகுதியாக கருணாநிதி திருச்சி கல்லக்குடியில் ரயில் போரட்டத்தில் ஈடுபட்ட போது அன்பில் தர்மலிங்கமும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். ஒரு கலெக்டருக்கு இணையானவர் மாவட்ட செயலாளர் என்கிற சித்தாந்தத்தை திராவிட இயக்கங்களில் உருவாக்கியவர்.

Half page

Leave A Reply

Your email address will not be published.