திருச்சி அருகே திருவிழாவில் வெடித்த வெடியால் சிறுவன் பலி:

0
Business trichy

திருச்சி அருகே திருவிழாவில் வெடித்த வெடியால் சிறுவன் பலி:

Full Page

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி சுதா. இவர்களது மகன் சசிதரன்(7). இவர்கள் மூவரும் திருச்சி மாவட்டம் துறையூா் வட்டம்,உப்பிலியபுரம் அருகே உள்ள சிறுநாவலூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு வழிபாட்டுக்காக சென்றுள்ளனா். அப்போது அங்கு தோரண வெடி வெடிக்கப்பட்டது. இதில் எதிா்பாராதவிதமாக வெடி ஒன்று சிதறி லோகநாதனின் மகன் சசிதரனின் மீது விழுந்து வெடித்துள்ளதாம். இதில் படுகாயமடைந்த சிறுவனை பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் அப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் சசிதரன் உயிரிழந்தான். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Half page

Leave A Reply

Your email address will not be published.