திருச்சியில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு:

0
D1

திருச்சியில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு:

N2

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம் சித்தாம்பூர் பஞ்சாயத்து தலைவர் யோகநாதன் தலைமையில் விவசாயிகள் நேற்று திருச்சி கலெக்டர் எஸ்.சிவராசுவை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

காவிரி கொடுந்துறை பாசன வாய்க்கால் வழியாக வரும் உபரிநீர் மழைக்காலங்களில் அய்யாற்றில் வீணாக செல்கிறது. அந்த உபரிநீர் செல்ல அய்யாற்றில் இருகரைக்கும் ஒரு சைமன் (கீப்போக்கி பாலம்) இருந்தது. அதில் அதிக அளவில் தண்ணீர் வந்து உடைந்து விட்டது.எனவே, அய்யாற்றில் ஒரு சைமன் அமைத்து, காவிரி உபரிநீரை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு சென்றால், சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவுள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.ஆகவே, வீணாக செல்லும் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

 

N3

Leave A Reply

Your email address will not be published.