திருச்சியில் பொன்மலை பணிமனை முன் 3வது நாளாக தொடரும் போராட்டம்:

திருச்சியில் பொன்மலை பணிமனை முன் 3வது நாளாக தொடரும் போராட்டம்:
திருச்சியில் பொன்மலை பணிமனை முன்பு 3வது நாளாக தமிழ்நாடு வேலை தமிழர்களுக்கே என வலியுறுத்தி தேசியப் பேரியக்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட்ட 3218 பேரில், வெளி மாநிலத்தவர்களில் 10 சதவிகிதத்துக்கு மேல் உள்ள அனைவரின் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும். அப்பணி இடங்களைத் தேர்வெழுதிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும். இதர மாநிலங்களில் உள்ளது போல் தமிழக மக்களின் வேலை தமிழர்களுக்கே வழங்க மாநில அரசு சட்டம் இயற்றி முன்னுரிமை வழங்க வேண்டும் என போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
