திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் கொண்டாட்டம்:

0
Business trichy

திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் கொண்டாட்டம்:

web designer

பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் பேரறிஞர் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 112-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

loan point

இன்று அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி அண்ணாவின் திரு உருவ சிலைக்கும் திருவுருவப் படத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும் அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் சிந்தாமணி அருகே உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அதிமுக, அமுமுக, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

nammalvar

இதேபோல் திமுகவினர் சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு கலைஞர் சிலை வைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.