திருச்சியில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு:

0
D1

 

N2

திருச்சியில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு:

திருச்சியில் சிறப்பாக பணிபுரியும் போலீசாரை பாராட்டும் விதமாக போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பதாகையில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாரின் புகைப்படத்துடன் அவர்கள் பணியில் செய்த சிறப்பான சேவை குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணிபுரியும் போலீசாருக்கு அவர்கள் பணியை பாராட்டும் வகையில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற லோகநாதன். திருச்சி அரசு மருத்துவமனையில் ஆதரவின்றி தவித்த மூதாட்டிக்கு உதவிய உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ், கொரோனா முழு ஊரடங்கின்போது ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய கொடுங்குற்றச்செயல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமணி ஆகியோர் உள்பட பலர் கமிஷனர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள பாராட்டு பதகையில் இடம் பிடித்துள்ளார். மேலும் அவர்களுக்கு கமிஷனர் லோகநாதன் பணி பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

N3

Leave A Reply

Your email address will not be published.