திருச்சியில் கள்ளிக்குடி மார்க்கெட்டில் நேற்று (14.09.2020) புதிய கடைகள் திறப்பு:


திருச்சியில் கள்ளிக்குடி மார்க்கெட்டில் நேற்று (14.09.2020) புதிய கடைகள் திறப்பு:
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.77 கோடியில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக கட்டப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. மாநகரிலிருந்து சுமார் 10கிமீ தொலைவில் இருப்பதால் வியாபாரிகள் பலரும் கடைகளை திறக்கவில்லை. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கள்ளிக்குடி மார்க்கெட்டை திறக்க கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடைகளைப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்துக்குப் பரிந்துரை செய்தது. இந்நிலையில் செப்.9 தேதி 20 கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனைத் தொடங்கியது. புதிதாக உரிமம் பெற்றவர்கள் உள்பட 244 கடைகளும் திறக்கப்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்த நிலையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை கடைகள் நேற்று (14.09.2020) திறக்கப்பட்டன.
