திருச்சியில் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்:

0
Business trichy

திருச்சியில் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம்:

web designer

திருச்சி செம்பட்டு பகுதியில் சேலத்தார் தோல் தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தோல் தொழிற்சாலை மூடப்பட்டது. ஆனால் இந்த தொழிற்சாலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய தொழிலாளர்கள் 55 பேருக்கு வழங்க வேண்டிய பண பலன்களை தொழிற்சாலை நிர்வாகம் வழங்க மறுத்துவிட்டது.

ஊழியர்கள் பலமுறை நிர்வாகத்திடம் கேட்டும் எந்த பலனும் இல்லாத காரணத்தினால், திருச்சி சுந்தர் நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர் வீட்டு வாயில் முன்பாக சி.ஐ.டி.யூ சார்ந்த திருச்சி மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டம் நடத்தினர். தொழிலாளர்களின் கஞ்சித்தொட்டி போராட்டத்தினால் திருச்சியில் பரபரப்பு நிலவுகிறது.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.