திருச்சியின் நச்…..

0
1

1. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் திருச்சி மாவட்டத்தில் இருந்தது. இப்பகுதி 1974-இல் திருச்சியிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைந்தது. நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சி மாவட்டம் 1995, செப்டம்பர் 30-ஆம் தேதி திருச்சி, கரூர், பெரம்பலூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
2. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமன் திருவானைக்காவலில் தான் பிறந்தார். அவருடைய வீடு அருங்காட்சியகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
3. மலைக்கோட்டை உச்சியில் உள்ள கோவிலின் மற்றொரு முக்கிய அம்சம், தாயுமானசாமி கோவில். தினசரி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மலைக்கோட்டைக் கோவில் திறந்திருக்கும்.
4. ராபர்ட் கிளைவ் மற்றும் டுப்லே என்கிற இரண்டு பெரிய பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் போர் படை தளபதிகளுகளுக்கு நடந்த நாடு பிடிக்கும் போட்டியில் திருச்சி மாட்டிகொண்டது. ராபர்ட் கிளைவ் திருவரங்கம் மற்றும் சமயபுரம் எதையும் தொடக்கூடாது என்று சொல்லி விட்டாராம். சந்தா சாஹிப் என்கிற மன்னனின் புத்திசாலித்தனம் அற்ற போர் முறையில் திருச்சி விழுந்தது. இந்த சந்தா சாஹிப் ஒன்று தமிழர் அல்ல. இவர் மராட்டியர். மராட்டியர்கள் தஞ்சையையும் திருச்சியையும் ஆண்டனர்.
5. நாகநாதர் டீ ஸ்டால் என்று திருச்சியில் நிறைய டீக்கடைகளைப் பார்க்கலாம். டீ, காபி தவிர வாழைக்காய் பஜ்ஜி சட்னியோடு கொடுப்பார்கள் மாலை நேரங்களில். அவ்வுளவு சுவையாய் இருக்கும்.
6. ‘டி. எஸ் ரங்கராஜன்’ என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் வாலி அவர்கள், 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்டதிலுள்ள “ஸ்ரீரங்கம்” என்ற இடத்தில் ‘ஸ்ரீனிவாசன் ஐயங்காருக்கும்’, ‘பொன்னம்மாள்’ என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர்களுடைய சொந்த ஊர் திருச்சிக்கு அருகிலுள்ள திருப்பராய்த்துறை ஆகும்.

3

Leave A Reply

Your email address will not be published.