தாயார் சொர்க்கவாசலைக்கடக்கும் நிகழ்ச்சி

0
D1

பொதுவாக வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் சொர்க்கவாசலைக் கடந்து வரும் வைபவம் வைணவத் தலங்களில் நடைபெறும்.

N2

வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாறாக, தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்வு மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, தாயார் மட்டுமே வாசலைக் கடந்துவருவார். எங்கு எனில் திருச்சி அருகேயுள்ள உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில்.

இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 வது திவ்ய தேசம்

N3

Leave A Reply

Your email address will not be published.