சாதனைப்பெண் – விஜிலா ஜாஸ்மின்

0
Business trichy

உலகில் பெண்கள் சாதனைகள் பல படைத்து சமுதாயத்தை தாங்கி பிடிக்கும் தூண்களாக மாறிவருகின்றனர்.
இந்த ‘சாதனை பட்டியலில் இடம் பிடித்தார் நம் திருச்சி மங்கை விஜிலா ஜாஸ்மின்.
சொந்த ஊரான திருச்சியில் பிலோமினாள் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், காவேரி கல்லூரியில் சமூக ஆர்வலர் படிப்பும், அதில் தங்கப்பதக்கமும் பெற்று, பின்பு MBA HR மற்றும் பின்பு மார்க்கெட்டிங் படிப்பையும் படித்தார்.
இதைத் தொடர்ந்து 5 வருடங்கள் மார்க்கெட்டிங் பணியை செய்துவந்தார். மார்க்கெட்டிங் பணி தன்னுடைய வாழ்வில் நிறைய அனுபவங்களையும் யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற புதினங்களையும் கற்றுக்கொடுத்தது. திருமண வாழ்க்கைக்கு பிறகு தற்போது டிவிஎஸ் நிறுவனத்தில் பணி புரிவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து 11 வருட உழைப்பு என்பது பெண்களுக்கு சாதாரணமல்ல. ஒருபுறம் தன்னுடைய வேலை, மறுபுறம் குடும்பம் என இரண்டையும் சமநிலையில் வைத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வந்திருக்கிறார் இந்த சாதனைப் பெண். இந்தச் சமயத்தில்தான் தென்னிந்தியாவின் பெண்கள் விருதுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய நான்கு மாநிலங்கள் அடங்கும்.
இதுகுறித்து விஜிலா ஜாஸ்மின் கூறும்போது…“இந்த விருதுக்கு லட்சக்கணக்கான பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். எனக்கு தயக்கமாகத்தான் இருந்தது. ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெரிய பெரிய நகரங்களில் இருந்து வந்திருக்கும் போது சிறிய நகராகிய எனக்கு கிடைக்குமா என்பதில் சந்தேகமாகத்தான் இருந்தது‌. இறைவனுடைய அருளால், நான் இந்த விருதை பெற்றேன். நான் அங்கு செல்லும்போது கூட தமிழகத்தில் இருந்து மிக குறைவான பேர் தேர்வு பெற்றிருந்தனர். சிறந்த தொழில்முறை விருது பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது இது போல இன்னும் நிறைய பெண்கள் வரவேண்டும். “புத்தியுள்ள ஸ்திரீ தான் தன்னுடைய வீட்டை கட்டுவாள்” என்ற பைபிள் வசனம் போல “பெண்களாகிய நாம் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்” என்கிறார் சாதனைப்பெண்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.