திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க மதிமுக வலியுறுத்தல்:

0
D1

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அரசு கல்லூரி அமைக்க மதிமுக வலியுறுத்தல்:

N2

மணப்பாறையில் அரசு கலை அறிவியில் கல்லூரி அமைக்க சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் என மதிமுக சார்பில் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணப்பாறையில் அரசு கலைக் கல்லூரி வேண்டும் என்று 20 ஆண்டாக பொதுமக்கள் தரப்பிலிருந்து வலியுறுத்தி வருகின்றனர். தற்சமயம், மணப்பாறை எம்எல்ஏ தொகுதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து இருமுறை அதிமுகவைச் சேர்ந்தவரே எம்எல்ஏவாக உள்ளார். இப்படியிருக்கும் சூழலில் இந்த ஆண்டு 7 புதிய கல்லூரிகள் துவங்கப்படும் என்ற அறிவிப்பில் மணப்பாறை இல்லாதது கண்டு இப்பகுதி மக்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். தமிழக முதல்வர் மணப்பாறை மக்களின் இருபதாண்டு கால கோரிக்கையை செவிமடுத்து, தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் மணப்பாறையில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கிவிடும் அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், இந்தக் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட உத்தரவிட வேண்டும் என மதிமுக மாநில தேர்தல் பணிச்செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

N3

Leave A Reply

Your email address will not be published.