திருச்சி அருகே காதலன் ஏமாற்றியதால் பெண் தற்கொலை:

திருச்சி அருகே காதலன் ஏமாற்றியதால் பெண் தற்கொலை:
சமயபுரம் அருகே உள்ள நெய்க்குப்பை காமராஜர் காலனியை சேர்ந்த குமாரின் மகள் ஆர்த்தி (20). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுந்தரமும் (31), கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சுந்தரத்தை ஆர்த்தி வலியுறுத்தியபோது, அவர் எனக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. அதனால் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதனால் விரக்கி அடைந்த ஆர்த்தி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆர்த்தியை தற்கொலைக்கு தூண்டியதாக சுந்தரத்தை கைது செய்தனர்.
