திருச்சியில் 60 வருட மரம் வேறோடு சாய்ந்தது:


திருச்சியில் 60 வருட மரம் வேறோடு சாய்ந்தது:
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள பட்டவர்த்தி ரோடு பகுதியில் சுமார் 60 வருடங்களுக்கு மேலான ஒரு வேப்பமரம் இருந்தது. இந்த வேப்பமரம் நேற்று இரவு திடீரென வேருடன் அடியோடு ரோட்டில் சாய்ந்தது. அப்போது அந்த மரத்திற்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த காரின் ஒரு பகுதியில் மரம் சாய்ந்தது. இதனால் காரின் பின் பகுதி சேதமடைந்தது. மேலும் சாலையில் நடுவே மரம் சாய்ந்ததால் அந்த வழியாக போக்குவரத்து சுமார் 2 மணிநேரம் தடைசெய்யப்பட்டது. மரம் விழுந்த நேரத்தில் தற்செயலாக யாரும் வராததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்த மின்சார ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இளைஞர்கள் மூலம் எந்திரங்களை கொண்டு மரத்தை துண்டு துண்டாக வெட்டி எடுத்தனர். அதற்கு பின் போக்குவரத்து பாதிப்பு சரிசெய்யப்பட்டது.
