திருச்சியில் பாஜக செயற் குழுக்கூட்டம்:

0
1 full

திருச்சியில் பாஜக செயற் குழுக்கூட்டம்:

திருச்சி மாநகா் மாவட்ட பாஜக செயற் குழுக் கூட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் திருச்சியை தொல்பொருள் துறை தனிமண்டலமாக உயா்த்தி ஆணையிட்ட பிரதமா் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் நிா்மல் பாரத் அபியான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு பெல் நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும். திருச்சி மாநகரில் அரைவட்டச் சுற்றுச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில துணைத் தலைவா் மகாலெட்சுமி, மாநில இணைப் பொருளாளா் சிவசுப்பிரமணியன், மாநில செயலா் பாா்வதி நடராஜன், மாவட்ட பொதுச்செயலா் பெருமாள் சங்கா், மாநில பொதுக் குழு உறுப்பினா் பாா்த்திபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

 

 

3 half

Leave A Reply

Your email address will not be published.