
திருச்சியில் கரோனா பாதுகப்புகளுடன் நீட் தேர்வு
திருச்சியில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு 22 மையங்களில் பலத்த கரோனா பாதுகாப்புகளுடன் நடை பெற்றது.அதில் 7,797 மாணவர்கள் தேர்வு எழுதினர் 1,702 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

+2 படிப்பை முடித்துவிட்டு மருத்துவ படிப்பை படிக்கவிருக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவு தேர்வு நேற்று நாடு முழுவதும் நடை பெற்றது. இந்நிலையில் திருச்சி,அரியலூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்காக திருச்சியில் 22 இடங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வு நோய் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளி மற்றும் கிருமிநாசினி கொண்டு சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்றது.
