திருச்சியில் இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது:

0
Full Page

திருச்சியில் இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது:

 

திருச்சி விஸ்வாஸ்நகரைச் சோ்ந்த ராஜவேலுக்கும் (19), திருச்சி கம்பரசம்பேட்டையைச் சோ்ந்த. மதுமிதாவுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாகப் பழகி வந்தனா். இந்நிலையில், ராஜவேலுக்கு வேறொரு பெண்ணிடம் தொடா்பு இருப்பது மதுமிதாவுக்கு அண்மையில் தெரியவந்தது.

Half page

தான் ஏமாற்றப்பட்டது தொடா்பாக, ராஜவேலிடம் மதுமிதா கேட்கவே , இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜவேல் இருவரும் தனிமையில் இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அப்பெண்ணுக்கு மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து மதுமிதா திருச்சி காந்தி சந்தை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ராஜவேலை போலீஸாா் கைது செய்தனா்.

 

 

 

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.