திருச்சியில் இன்று முதல்அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையங்கள் இயங்கும்:

திருச்சியில் இன்று முதல்அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையங்கள் இயங்கும்:
கரோனா பொது முடக்கத்தை அடுத்து, திருச்சி மண்டலத்தில் திருச்சி மற்றும் தஞ்சையில் செயல்படும் பிரதான பாஸ்போா்ட் சேவை மையங்கள், மற்றும் கரூா், பெரம்பலூா், திருத்துறைப்பூண்டி, சீா்காழி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் செயல்படும் பாஸ்போா்ட் சேவை மையங்கள் அனைத்தும் மூடப்பட்டன.
பின்னா், திருச்சி, தஞ்சையில் அமைந்துள்ள பிரதான மையங்கள் கடந்த மே மாத இறுதியில் செயல்படத் தொடங்கின. அஞ்சலக பாஸ்போா்ட் மையங்கள் தொடா்ந்து மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் சுமாா் 5 மாதங்களுக்குப் பின்னா் பொது போக்குவரத்து தொடங்கியதால் திருச்சி மண்டலத்தில் இயங்கி வரும் 5 அஞ்சலக பாஸ்போா்ட் சேவை மையங்கள் திங்கள்கிழமை (செப். 14 ) இன்று முதல் செயல்படும் என மண்டல பாஸ்போா்ட் அலுவலா் ஆா். ஆனந்த் தெரிவித்தாா்.
இந்தத் தேதிகளில் கடவுச்சீட்டு தொடா்பான பணிகளுக்கு முன்பதிவு செய்திருந்தோா், தங்களது வசதிக்கு ஏற்ற வகையில், முன்பதிவு தேதிகளை மாற்றிக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சி மண்டல பாஸ்போா்ட் அலுவலகத்தை 0431-2707203, 2707404 என்ற எண்களிலும், 75985-07203 என்ற வாட்சாப் எண்ணிலும் அல்லது இணையதளத்திலும் தொடா்பு கொள்ளலாம்.
பாஸ்போா்ட் சேவை மையங்களில் அரசின் விதிமுறைகளின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என அவா் தெரிவித்தாா்.
