
தொலைப்பேசி திருட்டு, Ntrichy.com எதிரொலி, போலீஸ் அதிரடி, திருச்சியில் நடந்த சம்பவம்.
திருச்சி புத்தூர் ராஜரத்தினம் பிள்ளை தெரு பகுதியில் அமைந்துள்ள மனித முதியோர் இல்லத்தில் 11. 9. 2020 அன்று காலை இளம் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு மருத்துவச் செலவிற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆவதாகவும். அதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறி மனிதம் முதியோர் இல்லத்தை தொடர்பு கொண்டார். மனிதம் பணியாளர்கள் குழந்தைக்கு உரிய மருத்துவ ஆவணங்களை எடுத்து வரவும் அதை ஆய்வு செய்து பிறகு உங்களுக்கு உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்வதாக கூறிவிட்டு, மனிதம் பணியாளர்கள் அலுவலகத்தின் உள் புறத்திற்கு சென்று விட்டனர். வெளியே செல்வது போல் சென்று விட்டு மீண்டும் உள்ளே நுழைந்த அந்த இளம் பெண் டேபிளில் இருந்த ஆப்பில் ஐபோனினை திருடி எடுத்துச் சென்று விட்டார்.
அந்தப் பெண் திருடியதை சிசிடிவி காட்சியில் உறுதிப்படுத்திய மனிதன் முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள் உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்து பிறகு என் திருச்சி இணைய இதழுக்கு தொடர்பு கொண்டு சிசிடிவி காட்சியை செய்தியாக வெளியிட்டு தொலைபேசி கிடைக்க உதவுமாறு கோரினார் இதன் அடிப்படையில். என் திருச்சி முகநூல் பக்கத்தில் திருடிய வீடியோ வெளியிடப்பட்டது.

மேலும் என் திருச்சி குழுவினர் உறையூர் காவல்நிலைய குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் பாத்திமா அவர்களை தொடர்பு கொண்டோம். பாத்திமா அவர்கள் தகவல் கிடைத்த உடன் சிசிடிவி கேமராவை கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம் என்று கூறினார்.

அந்த நிலையில் காணாமல் போன தொலைபேசி தேடிக் சென்ற மனிதன் குழுவினர் திருச்சி பிஷப் கல்லூரி அருகே உள்ள பஞ்சாப் பேங்க் அருகே போன் திருட வந்த பெண்ணின் வண்டி நிற்பதாக அடையாளம் கண்டுபிடித்தனர். இதுகுறித்து உறையூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உடனடியாக உதவி ஆய்வாளர் பாத்திமா அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்தார். என் திருச்சி இதழுக்கு தகவல் கிடைத்து நாங்களும் அந்த சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றோம்.
நாங்கள் வருவதற்கு முன்பே அந்த திருடிய இளம்பெண் அங்கிருந்து சென்று விட்டார்.
பிறகு என் திருச்சி குழுவினர் உதவி ஆய்வாளர் பாத்திமா அவரிடம் கேட்கும்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கிறது விரைவில் குற்றவாளியை பிடித்துவிடுவோம். வண்டி நம்பரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று கூறினார்.

இந்நிலையில் என் திருச்சி இதழில் வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த என் திருச்சி வாசகர் ஒருவர் என் திருச்சிக்கு முகநூல் பக்கத்திற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அந்த குறுஞ்செய்தியில் நான் தொலைபேசிக் கடை வைத்திருப்பதாகவும். வீடியோவில் உள்ள அந்த பெண் ஐ போனை என்னிடம் விற்பனை செய்ய வந்ததாகவும் ஆனால் அந்தப் பெண்ணின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் நான் வாங்கவில்லை. மேலும் அந்தப் பெண்ணுடைய தொலைபேசி எண் பதிவாகி இருப்பதாக யாசர் அராஃபத் என்ற நபர் என் திருச்சி .இதழுக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

உடனே என் திருச்சி குறுஞ்செய்தி அனுப்பியவருடைய தொலைபேசி எண்ணை பெற்றது.
இந்த விவரத்தை என் திருச்சி உறையூர் குற்றப் பிரிவு உதவி ஆய்வாளர் பாத்திமா அவர்களுக்கு தெரியப்படுத்தியது. இதன் பெயரில் 13 .9 .2020 இன்று என் திருச்சியும் காவல் உதவி அதிகாரி பாத்திமா அவர்களும் யாசர் அராஃபத்தை நேரில் சந்தித்து செய்தியை உறுதிப்படுத்தினோம். இதன் அடிப்படையில் அந்தப் பெண்ணை தொடர்பு கொண்டு காணாமல் போன தொலைபேசியை பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்குவது போல் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேசி அந்தப் பெண் இருக்கும் இடத்தை அறிந்தோம்.
அந்தப் பெண் திருச்சி வான பட்டறை தெருவில் அமைந்திருக்கக் கூடிய தனியார் விடுதியில் தங்கி இருப்பது அறிந்து என் திருச்சி குழுவினரும் காவல் உதவி ஆய்வாளர் பாத்திமா அவர்களும் சம்பவ இடத்திற்குச் சென்றோம்.
அந்தப் பெண் விடுதியில் இருப்பதை உறுதிப்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் பாத்திமா அவர்கள் உடனடியாக அந்தப் பெண் வைத்திருந்த காணாமல் போன தொலைபேசி பெற்றுக் கொண்டு அந்தப் பெண்ணை கைது செய்தார்.
சமூகத்தில் தினம் தினம் குற்றச் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை பார்த்தும் பார்க்காமல் போகும் இந்த அவசர சமூகக் கட்டமைப்பு மத்தியில் தொலைபேசி பற்றிய விவரங்களை கொடுத்து உதவிய யாசர் அராபத்தின் உதவிக்கும். பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த உடனே, உடனுக்குடன் அதிரடி காட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு, குற்றவாளியை பிடித்த காவல் உதவி ஆய்வாளர் பாத்திமா அவர்களுக்கும் என் திருச்சி தனது வாழ்த்துக்களை பதிவு செய்கிறது.
ஊடகத்தின் பணி என்பது செய்தியை அடையாளப்படுத்துவது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டோருக்கான நீதியை பெற்றுத்தர உதவுவதும் தான் அதையே என் திருச்சி மேற்கொண்டது.

நன்றி Ntrichy பத்திரிக்கை மற்றும் இப்ராஹிம்