வங்கியில் வேலைவாய்ப்பு:

0
Business trichy

வங்கியில் வேலைவாய்ப்பு:

நாட்டில் உள்ள பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு, ஐ.பி.பி.எஸ்., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம்: குஜராத் 119, மஹாராஷ்டிரா 334, பஞ்சாப் 136, உத்தரபிரதேசம் 136, மேற்கு வங்கம் 125, தமிழகம் 77, பீஹார் 76 உள்பட மொத்தம் 1557 காலியிடங்கள் உள்ளன.

Image

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில அலுவல் மொழியில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு தேவைப்படும்.

வயது : 1.9.2020 அடிப்படையில் 20 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி , மெயின் என இரண்டு கட்ட ஆன்லைன் எழுத்துத்தேர்வு.

Rashinee album

தேர்வு தேதி: பிரிலிமினரி டிசம்பர்.5, 12, 13.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலுார், ஈரோடு, சேலம், தஞ்சை, நெல்லை, விருதுநகர், நாகர்கோயில்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ.175

கடைசிநாள்: 23.9.2020

விபரங்களுக்கு: www.ibps.in/wp-content/uploadsDetailedAdvtCRPClerksX.pdf

 

Ukr

Leave A Reply

Your email address will not be published.