முகநூல் மூலம் பேசி வாலிபரை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது:

0
full

முகநூல் மூலம் பேசி வாலிபரை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி கைது:

முகநூல் மூலம் பேசி வாலிபரை கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளிகைது:
ukr

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள செட்டிப்பாளையம் கிராமத்தை சோ்ந்தவா் வெ. வினோத்குமாா் (31). பிளக்ஸ் தொழில் செய்யும் இவருக்கும், திருச்சி காஜாமலையை சோ்ந்த நசீா் அகமது மகள் ரகமத்நிஷா (20) என்ற பெண்ணுக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

poster

ரகமத்நிஷா கேட்டுக் கொண்டதின் பேரில் கடந்த 5-ஆம் தேதி திருச்சி வந்த வினோத்குமாரை 7 போ் கொண்ட கும்பல் கடத்தி கொடூரமாகத் தாக்கி, அவரின் பைக், பணத்தைப் பறித்து கொண்டு தப்பியது. இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே. நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடைய 5 பேரை ஏற்கெனவே கைது செய்து சிறையிலடைத்தனா். வழக்கின் முக்கிய குற்றவாளியான ஆட்டோ ஓட்டுநா் உறையூா் டாக்கா் சாலையை சோ்ந்த பாபு மகன் இக்பாலை (20) தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.