திருச்சி மீன் மார்க்கெட் மொத்த வியாபார கடைகளுக்கு நாளை விடுமுறை:

0
1 full

திருச்சி மீன் மார்க்கெட் மொத்த வியாபார கடைகளுக்கு நாளை விடுமுறை:

திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் கடந்த வாரம் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மீன் வாங்க ஏராளமானோர் கூடினார்கள். இதனால் அங்கு சமூக இடைவெளியை யாரும் கடைப்பிடிக்கவில்லை. இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று வியாபாரிகளை எச்சரிக்கை செய்தனர். மேலும் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 8 மீன்கடைகளை சீல் வைக்க நடவடிக்கை எடுத்தனர். பின்னர் வியாபாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அந்த 8 கடைகளின் வியாபாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், மீன் வாங்க ஏராளமானோர்கள் கூடுவார்கள் என்பதால், நாளை ஒரு நாள் மொத்த வியாபார கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாக புத்தூர் மீன் மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

3 half

Leave A Reply

Your email address will not be published.