திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாட்ஸ்அப் மூலம் மனு அனுப்பும் வசதி :

0
D1

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாட்ஸ்அப் மூலம் மனு அனுப்பும் வசதி :

N2

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் பிரதிவாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் பெறப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு 144 தடை உத்தரவு 30.09.2020 வரை அமலில் உள்ளது.

ஆதலால் நாளை மறுநாள் முதல் பிரதி வாரம் திங்கட்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 வரை 9445461756 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொது மக்கள் தங்களது கோரிக்கை குறித்த மனுக்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி பொதுமக்கள் கோரிக்கைகளில் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகள் குறித்தும், பட்டா மாற்றம் குறித்து ஏற்கனவே இணைய வழி மூலமாக மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.  எனவே மேற்படி கோரிக்கைகளை அதற்கான இணையதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

N3

Leave A Reply

Your email address will not be published.