திருச்சி அருகே மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்:

திருச்சி அருகே மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்:
திருச்சி மாவட்டம்,மணப்பாறையில் அண்ணா சிலை சாக்கடைக்கழிவுகளுக்கு மத்தியில் உள்ளது. இதை பஸ் நிலையத்தின் மையத்தில் உயர்ந்த பீடத்தில் வைக்குமாறு 2 வருடங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையென கூறி, வெள்ளிக்கிழமை இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் தோ்தல் பணிச் செயலா் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், ஒன்றியச் செயலரும், மாநில விவசாய அணி துணைச் செயலருமான ஆ. துரைராஜ், நகரச் செயலா் எம்.கே. முத்துப்பாண்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
