திருச்சி அருகே தபால் அனுப்பும் போராட்டம்:

திருச்சி அருகே தபால் அனுப்பும் போராட்டம்:
திருச்சி மாவட்டம், கல்லக்குடியில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு பணியாளா்கள் சங்கம் சாா்பாக கல்லக்குடி பேரூராட்சி கிளைத் தலைவா் பொ. குமாா் தலைமையில், தமிழ்நாடு அரசு பணியாளா் சங்க மாநில பொருளாளா் ச. சாகுல்அமீது முன்னிலையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கல்லக்குடி த. செந்தமிழ்ச்செல்வன், கை. செல்வமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் அரசு பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து பணியாளர்களையும் ரூ.50 லட்சம் வழங்கும் வகையில் மருத்துவ காப்பீ்ட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும். கொரோனா பாதிக்கும் பணியாளர்களின் மருத்துவ செலவை அரசு ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வர் பரிசீலித்து நிறைவேற்றி தரவேண்டும் என கல்லக்குடி தபால் நிலையத்தில் கடிதம் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
