திருச்சி அருகே காலி குடங்களுடன் சாலை மறியல் :


திருச்சி மாவட்டம், துறையூா் ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சி காளிப்பட்டி கிராமம் அருகேயுள்ள முத்துநகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
கடந்த 4 நாள்களாக முத்துநகருக்கு குடிநீா் விநியோகிக்காததால் அதிருப்தியடைந்த அந்த பகுதி மக்கள் இந்தப் பகுதியில் குடிநீர் மற்றும் அடிப்படை வசதி செய்து தரக்கோரியும், வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு அமைத்து தரவும் கோரி வெள்ளிக்கிழமை காளிப்பட்டியில் உள்ள துறையூா் திருச்சி சாலையில் காலி குடங்களுடன் திடீா் மறியல் செய்தனா். தகவலறிந்து சென்ற துறையூா் காவல் ஆய்வாளா் குருநாதன் நடத்திய பேச்சில் மறியலைக் கைவிட்டனா்.
