திருச்சியில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்:

திருச்சியில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்:

திருச்சி திருவானைக்காவல் டிரங்க் ரோடு பகுதியில் உள்ள களஞ்சியம் பகுதியில் 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உடனடியாக அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்ரீரங்கம் பகுதிச் செயலா் தா்மா தலைமையில் வெள்ளிக்கிழமை காலை இந்தப் போராட்டம் நடந்தது. மாவட்டச் செயலா் ராஜா, வீரமுத்து மற்றும் பொதுமக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
பின்னா் மாநகராட்சி கோட்ட உதவி ஆணையா் திருஞானம் தலைமையில் நடந்த பேச்சுவாா்த்தையில் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனா்.
