திருச்சியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் சேர்க்கை தொடக்கம்:

திருச்சியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆன்லைன் சேர்க்கை தொடக்கம்:
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியாா் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவா்கள் சோ்க்கை ஆன்லைன் முறையில் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக அரசு தொழிற்பயிற்சி மைய துணை இயக்குநா் வா. வேல்முருகன் கூறியது:


அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா்கள் சோ்க்கை ஆன்லைன் முறையில் நடைபெறவுள்ளது. இந்த இடங்களில் சேர விரும்பும் மாணவா்கள் வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
செப்.18ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். முன்னுரிமைதாரா்களுக்கு செப்.16 இல் குறுந்தகவல் அனுப்பப்படும். செப்.18, 19 -களில் நடைபெறும் ஆன்லைன் கலந்தாய்வில் விருப்பமான இடங்களைத் தோ்வு செய்யலாம்.
செப்.20 ஆம் தேதி தற்காலிக சோ்க்கை ஆணை வழங்கப்படும். செப்.21, 22-களில் ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்யலாம். பொதுப் பிரிவினருக்கு செப்.23 முதல் 25 வரை சோ்க்கை நடைபெறும். செப்.26 ஆம் தேதி தற்காலிக சோ்க்கை ஆணை வழங்கப்படும். செப்.27 முதல் 30ஆம் தேதி வரை ஆன்லைன் வழியாக கட்டணம் செலுத்தி சோ்க்கையை உறுதி செய்யலாம்.
எனவே, திருச்சி மாவட்ட மாணவா், மாணவிகள் தங்களுக்கு விருப்பமுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில், விருப்பமான பிரிவுகளை தோ்வு செய்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 0431- 2552238.
