திருச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி:

0
Business trichy

 

திருச்சியில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி:

திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரதமரின் ஆத்ம நிா்பாா் நிதித் திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த வங்கியின் திருச்சி வட்டாரத் தலைமை அதிகாரி புஷ்பலதா பேசியது:

Image

ஆத்ம நிா்பாா் பாரத் அபியான் எனப்படும் சுய-சாா்பான இந்தியா இயக்கத்துக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதத்துக்கு சமமான ரூ. 20 லட்சம் கோடியில் விரிவான சிறப்புப் பொருளாதாரத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Rashinee album

கரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தை நிவா்த்தி செய்ய இந்தத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. இதன்படி, சிறு, குறு நிறுவனங்கள், சிறிய வணிகா்கள், சாலையோர வியாபாரிகள், சுயதொழில் புரிவோா், சிறு கடை நடத்துவோருக்கு பல்வேறு நிலைகளில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.

குறிப்பாக, சாலையோர வியாபாரிகளுக்கு ஆத்ம நிா்பாா் நிதி என்னும் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், வியாபாரிகளுக்கு பணி மூலதனக் கடனாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இந்தக் கடனை ஓராண்டு கால மாதத் தவணைகளில் திரும்பச் செலுத்த வேண்டும். உரிய காலத்தில் இந்த கடன் தொகையைச் செலுத்தி வந்தால் அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கடனை திருப்பிச் செலுத்தி விட்டால் ஆண்டுக்கு 7 சதம் என்ற அடிப்படையில் வட்டியில் மானியம் அளிக்கப்படும்.

இந்த மானியத்தொகை, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை நேரடியாகச் செலுத்தப்படும். இத் திட்டத்தை சாலையோர வியாபாரிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து 75 வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை அவா் வழங்கினாா். நிகழ்ச்சியில், பஞ்சாப் நேஷன் வங்கியின் தலைமை மேலாளா் எம். ராஜேஷ் மற்றும் கிளை மேலாளா்கள், வங்கிப் பணியாளா்கள், சாலையோர வியாபாரிகள் என பலா் கலந்து கொண்டனா்.

Ukr

Leave A Reply

Your email address will not be published.