முதுமைக்கு ஓய்வு கொடுக்கும் நீலாம்பாள் பாட்டி

0
1

திருச்சி உத்தமர் கோயில் ரயில்வே கேட் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வரட்டியின் அருகே. உட்கார்ந்திருந்தார் 80வயதான நீலாம்பாள் பாட்டி. இவரது கணவர் ஆசிரியராக இருந்து சமீபத்தில் மறைந்தார். அவரின் மறைவுக்கு பிறகு வரட்டி செய்து விற்று வாழுகிறார். தள்ளாத வயதில் உழைத்து வாழவேண்டும் என்று பேசிய அந்த பாட்டி நீலாம்பாள்,

“100 வரட்டி 150 ரூபாய்க்கு விற்கும் அதிலேயும் பேரம்பேசி குறைப்பாங்க. இந்த வரட்டியை வீடு குடி போக செய்யப்படும் யாகத்துக்கு. இறந்தவங்கள எரிக்கவும் வாங்கிட்டு போவாங்க. சமீபகாலமாக ஸ்ரீரங்கத்து அய்யர்ங்க வாங்குவாங்க. ஆனால் இப்போது அங்கேயே வரட்டி செய்கிறாங்களாம்.

அதனால் வரட்டி அதிகம் விற்பதில்லை. மழை தண்ணி பொழிந்தால் வரட்டி விற்கும், மழை வர்றதே இல்லை எனக்கு பொழைப்பு குறைந்துபோச்சு.

2

இதெல்லாம் விற்குதோ இல்லயோ வேலை வெட்டி செஞ்சாதான் உடம்பு நல்லாருக்கு சாமி. அதனால என்னால என்ன முடியுதோ அந்த வேலையை செய்து வருகிறேன் என்றார். தன்னம்பிக்கையோடு.
நீலாம்பாள் பாட்டி போன்றவர்கள் உழைப்பின் அடையாளம்.-

பா. வசந்தன்

1-2-2017

3

Leave A Reply

Your email address will not be published.