சுதந்திரப் போராட்ட முன்னோடியான டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்

திருச்சியின் அடையாளங்கள்-16

0
1

1880ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தில்லைஸ்தானம் என்னும் சிற்றூரில் பிறந்தவா் டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன். இளமையிலேயே ஸ்ரீரங்கத்தில் குடியேறியவர். தூயவளனார் பள்ளியிலும் பின்னர் சென்னை ராயப்பேட்டை மருத்துவக் கல்லூரியிலும் பயின்று மாநிலத்தில் முதல் மாணவராகத் தேறினார்.

பா்மா சென்று மருத்துவப் பணியாற்றியபோது. அங்கே இவருக்கு புரட்சிகாரா்களுடன் தொடர்பு ஏற்பட்டது. மருத்துவ மேற்படிப்பிற்க்காக இவர் இங்கிலாந்து சென்றார். அங்கே அறுவை சிகிச்சை துறையில் சிற்நத மருத்துவராகப் பெயர் பெற்றார். ராஜனுக்கு இருந்த விடுதலை வேட்கையால் லண்டன் இந்தியா ஹவுசில் இருந்த வீரசாவா்க்கர், வ.வே.சு.அய்யா், மாதவராவ், மதன்லால் திங்காரா போன்ற புரட்சிக்காரா்களிடம் நெருங்கிய நட்பு கொண்டார். இந்தியா ஹவுசில் அண்ணல் காந்தி அடிகளுக்கு இவர் செய்த பணிவிடைகள் காந்தி அடிகளை பெரிதும் கவர்ந்தது.


தேசிய காங்கிரஸில் தீவிர உறுப்பினரானார். திருச்சிராப்பள்ளியில் ஜங்சன் அருகில் டாக்டா் ராஜனின் மருந்தகத்தை அண்ணல் காந்தியடிகள் திறந்துவ வைத்தார். 1920ல் தேசிய காங்கிரஸின் மகாசபையின் செயலாளரானார். 1930ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையில் நடத்தப்பட்ட வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் டாக்டா் ராஜனின் பங்கு மகத்தானது. மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இப்போராட்டத்திற்கு நித்சோ்த்தார். இப்போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் இருந்தார். விடுதலைப் போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திறம்பட நடத்தியுள்ளார்.

2

சுதந்திர போராட்ட காலத்தில் ஆண்டுதோறும் சுதேசிக் கண்காட்சியை அமைத்து ராஜேந்திரபிரசாத், ஆச்சாரிய வினோபாவே போன்றவா்களை அழைத்து வந்து நாட்டுப்பற்றை ஊட்டினார்.

சட்டமன்ற உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் 1937க்கு பிறகு ராஜாஜி அமைச்சரவையில் சுகாதார துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.ஸ்ரீரங்கம் கோவிலுக்குள் அரிஜன ஆலய பிரவேசத்தினை வெற்றிகரமாக நடத்தி இதனால் சனாதன ஹிந்துப் பெண்களால் ஸ்ரீரங்கத்தில் தாக்குதலுக்கு உள்ளானார். இவர அமைச்சராக இருந்தபோது அரசு மருத்துவமனை டாக்டா்கள் தனியே தொழில் செய்வதை தடை செய்தார். அரசு மருத்துவ மனைகளுக்கு திறமையுள்ள மருத்துவர்களைக் கௌரவ மருத்துவர்களாக நியமித்தவர் இவரே. மாவட்ட தாலுகா தலைநகர்களில் மருத்துவமனைகள் உருவாக பெரிதும் பாடுபட்டார். 1954ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக ஓமாந்தூர் ராமசாம ரெட்டியார் அமைச்சரவையிலும், குமாரசாமி ராஜா அமைச்சரவையிலும் அமைச்சராக அங்கம் வகித்தார்.

சிறந்த மருத்துவராகவும், விடுதலைப்போராட்ட வீரராகவும் இருந்த டாக்டா் ராஜன் மிகச்சிறந்த இலக்கிய வாதியாகவும் திகழ்ந்தார். ”எனது நினைவலைகள்”, ”தமிழ்நாட்டில் காந்தி போன்ற” இவரது நூல்கள் சிறப்பானவை. அக்காலத்தில் கல்லூரிகளிலும் இலக்கிய கூட்டங்களிலும் இவரது சொற்பொழிவுகள் பெரிதும் போற்றப்பட்டுள்ளன.
வேளாண்மையிலும் புதிய தொழில் நுட்பங்களைக் கையாண்டு வேளாண்மை வளா்ச்சியிலும் ஆா்வம் கொண்டிருந்தார். 1951ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். 1953ஆம் ஆண்டு அக்டோபா் 27ல் மரணமடைந்தார்.

3

Leave A Reply

Your email address will not be published.