வெக்காளியம்மன் கோயிலில் தரிசனத்துக்கு மாற்று ஏற்பாடு

0
Business trichy

திருச்சி, உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் செப். 12 முதல் பணிகள் முடியும் வரை வடக்கு ராஜகோபுரம் அருகே பக்தா்கள் நின்று தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருக்கோயில் நிா்வாக செய்திக்குறிப்பு :

web designer

உறையூா் வெக்காளியம்மன் கோயிலில் அரசு விதிகளின்படி செப். 1 முதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதியளிக்கப்படுகின்றனா். இந்நிலையில், கோயில் திருப்பணி 12 ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் நடைபெறவுள்ளன.

loan point

குறிப்பாக, மகா மண்டபம், பிரதான மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் நடைபெறுவதால், பாதுகாப்பு கருதி பக்தா்களை கோயிலுக்கு அனுமதிக்க இயலாது. எனவே , கோயின் வடக்கு ராஜகோபுரம் அருகிலிருந்து அம்பாள் (மூலவா் மற்றும் உற்ஸவா்) தரிசனம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே பக்தா்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

IAS academy

Leave A Reply

Your email address will not be published.