திருச்சி ரயில்வே ஜங்சனில் நவீன தானியங்கி தெர்மல் ஸ்கேனிங் கருவி:

0
full

திருச்சி ரயில்வே ஜங்சனில் நவீன தானியங்கி தெர்மல் ஸ்கேனிங் கருவி:

திருச்சிராப்பள்ளி ரயில்வே ஜங்சனுக்கு வரும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை தெர்மல்  ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இந்த பரிசோதனை ரெயில் பெட்டி அருகில் நடத்தப்பட்டது. தற்போது திருச்சி ஜங்ஷன் இரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் இதற்காக நவீன தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை கருவி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவியானது சி.சி.டி.வி கேமரா உடன் இணைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் வரும்போதே அவர்களை படம் பிடிக்கும் இந்த கருவியானது அவர்களது உடல்  வெப்பத்தை கணினி திரையில் தெரியப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ukr

பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் விரைவாக தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 37 டிகிரி செல்சியஸ்-க்கு மேல் அதிக உடல் வெப்பநிலையுடன் பயணிகள் யாராவது கடந்தால் அலாரம் ஒலி உடனே எழுப்பும்.

poster

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பயணிகளிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

half 1

Leave A Reply

Your email address will not be published.