திருச்சி இரயில்வே தொழிலாளர்களின் தந்தை-எம். கல்யாணசுந்தரம்

திருச்சியின் அடையாளங்கள் - 17

0

மிக நீண்ட காலம் ஈடுபட்டுள்ளவர்களில் எம். கல்யாணசுந்தரம்  ஒருவர். அவரைப்பற்றி நம்ம திருச்சியின் அடையாளம் பகுதியில் காண்போம்.

திருச்சிராப்பள்ளியில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்த முன்னோடிகளில் ஒருவரான எம். கல்யாணசுந்தரம் குளித்தலையில் 1908-ல் பிறந்தவர்.


முதலில் உறையூர் திண்ணைப்பள்ளியிலும், புனித வளனார் பள்ளியில் பயின்றவர். 1928-ல் திருச்சிராப்பள்ளியில் சிங்காரவேலர் தலைமையில் நடந்த ரயில்வே வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கு கொண்ட இவர். 1937 முதல் ரயில்வே தொழிலாளியாக ஈரோட்டில் பணியாற்றினார். அங்கு கே.டி. ராஜீ, பி.எம். சுப்ரமணியன் ஆகியோருடன் இணைந்து ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற அமைப்பை துவங்கினார். காந்தியத்தால் ஈர்க்கப்பட்டு காங்கிரசில் சேர்ந்து பணியாற்றியதோடு, ரயில்வே தொழிற்சங்க வளர்ச்சிக்கும் பாடுபட்டார்.

1937-ல் பொன்மலையை தலைமையகமாக கொண்டு எஸ்.ஐ. ரயில்வே லேபர் யூனியன் என்ற அமைப்பை தோற்றுவித்து அதன் செயலாளராக இருந்தார். 1939-ல் ரயில்வே தொழிலாளர்களுக்கு என தொழிலரசு என்கிற இதழை ஆரம்பித்து அதன் முதல் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1940-ல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வாசம் அனுபவித்தார்.

1946 ல் அகில இந்திய ரயில்வே ஊழியர் சம்மேளத்தின் உப தலைவரானார். மற்றொருவர் ஜோதிபாசு. சம்மேளனத் தலைவர் ஏ. ஜெயபிரகாஷ் நாராயணன்.

1946 -ல் ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்று தொழிலாளர்களின் கரத்தை வலுப்படுத்த போராடினார். பொன்மலையில் நடைபெற்ற இந்த போராட்டம் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். ஆங்கில போலீஸாரின் அடக்கு முறையாலும் துப்பாக்கி சூட்டினாலும் 5 தொழிலாளர்கள் உயிர் இழந்தார்கள். இந்த போராட்டத்தில் எம்.கல்யாண சுந்தரம் விலா எலும்பு முறிந்தது. இதற்கு பின் ஓராண்டு காலம் இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

1950 -ல் கம்யூனிஸ்ட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்தார். 1952 , 1956 வரை பொது தேர்தல்களில் இரண்டாவது சட்டமன்ற தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1959ல் நடைபெற்ற மிகப்பெரும் பீடி தொழிலாளர் போராட்டத்தில் தலைமை வகித்து தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை பெற்று தந்தார்.
1971 -ல் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிப்பெற்றார். 1988 ல் இந்திய ஐக்கிய பொதுவுடமை கட்சியை தோற்றுவித்து அதன் மாநில தலைவராக செயல்பட்டு, 1988 ஜீன் மாதம் இயற்கை எய்தினார்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் வாழ்வின் ஆதராத்திற்கு போராடிக்கொண்டிருந்த எம்.கல்யாணசுந்தரம் இன்றைய இளைஞர்களின் வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவரை நம்ம திருச்சி இதழிலின் மூலம் இன்றைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதில் நம்ம திருச்சி பெருமையடைக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.