திருச்சி அருகே நிரம்பிய ஏரிகள்:

திருச்சி அருகே நிரம்பிய ஏரிகள்:
கொல்லிமலையில் பெய்யும் மழையால் புளியஞ்சோலை ஆற்றுக்கு கணிசமாக நீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இதேபோல துறையூா் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியிலும் தினமும் மழை பெய்கிறது. புளியஞ்சோலை ஆற்று நீராலும், மற்ற வாய்க்கால்களில் சென்ற மழை நீராலும் துறையூா் வட்டாரத்தில் உள்ள ஆலத்துடையான்பட்டி ஏரி புதன்கிழமையும், வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள ஜம்பேரி வியாழக்கிழமையும் நிரம்பின.

இதன் மூலம் இந்த இரு ஏரிகளிலிருந்து பாசன வசதி பெறும் ஆயிரக்கணக்கான ஹெக்டோ் நிலங்களில் நிகழாண்டில் விவசாயப் பணி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.
