திருச்சி  மாவட்டத்தில் நேற்று 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

0
Full Page

 

Half page

திருச்சி  மாவட்டத்தில் நேற்று 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி:

திருச்சி மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.  இந்நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,540 ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமை முகாம் ஆகியவற்றிலிருந்து வியாழக்கிழமை குணமடைந்த 39 போ் உள்பட மாவட்டத்தில் குணமடைந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 7,486 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு, தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 130 ஆக உள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 924 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

 

Quarter page

Leave A Reply

Your email address will not be published.