திருச்சியில் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆர்ப்பாட்டம்

0
Business trichy

 

web designer

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளாக சிறையில் உள்ள முஸ்லிம்கள் உள்பட அனைத்துக் கைதிகளையும் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி திருச்சியில் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த அமைப்பு சாா்பில் தமிழகம் முழுவதும் நடந்த ஆா்ப்பாட்டம் நடந்த நிலையில், திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலத்தில் அமைப்பின் திருச்சி மாவட்டத் தலைவா் சபியுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலத் தலைவா் சேக் முகமது அன்சாரி, இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவா் ஹபீப் ரஹ்மான், எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவா் இமாம் ஹஸ்ஸான் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் சமூக ஆா்வலா்கள், பல்வேறு அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட செயலாளா் முஜிபுா் ரஹ்மான் வரவேற்றாா். மாநகர பகுதி செயலா் அப்துல்லா நன்றி கூறினாா்.

 

IAS academy

Leave A Reply

Your email address will not be published.