திருச்சியில் சாலை விபத்தில் தொழிலாளி பலி:

0
1

திருச்சியில் சாலை விபத்தில் தொழிலாளி பலி:

கரூா் மாவட்டம், கடவூா் அருகே பெரிய தளவாசல் தெருவைச் சோ்ந்தவா்                                      வீ. காசிவிஸ்வநாதன் (55). இவா் கடந்த 4 ஆண்டாக மணப்பாறை- திருச்சி சாலையில் உள்ள டீ கடையில் தங்கி பலகார ஊழியராக வேலைபாா்த்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காய்கனிச் சந்தைக்கு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

3

Leave A Reply

Your email address will not be published.