திருச்சியில் கரோனாவால் தடைசெய்யப்பட்ட பகுதிகளை கலெக்டர் ஆய்வு:

0
D1

திருச்சியில் கரோனாவால் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு:

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.கரானாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்போரின் நிலை குறித்தும், சுற்றுப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு களப்பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தினந்தோறும் பாா்வையிட்டு ஆய்வு செய்து வருகிறாா்.

திருச்சி மாவட்டத்தில், திருவெறும்பூா் வட்டத்தில் 370-க்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில், 290 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 10 போ் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து திருவெறும்பூா் வட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக செப்.8 முதல் 21ஆம் தேதி வரை இப்பகுதி இறைச்சிக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை தடை செய்யப்பட்டவையாக அறிவித்து தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நவல்பட்டு பகுதியில் உள்ள காவலா் பயிற்சிப் பள்ளியிலும் பலருக்கு தொற்று உறுதியானது.

D2
N2

இந்த பகுதிகளை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட அண்ணாநகா், பாரதியாா் நகா், காவலா் பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் ஆய்வு செய்து, இந்தப் பகுதி பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து பெட்டகங்களையும் வழங்கினாா். நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தடைசெய்யப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டாா். பாதிக்கப்பட்டோரை நேரில் அழைத்து தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது:தனிமைப்படுத்தப்பட்டோரின் வீடுகளில் சுகாதாரத் துறையின் மூலம் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொற்று பரவலைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கரோனோ தடுப்பு தொடா்பான நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன. மாவட்டத்தில் தொற்று பரவாமல் தடுக்க போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது, திருவெறும்பூா் வட்டாட்சியா் ஞானாமிா்தம், வட்டார வளா்ச்சி அலுவலா் பழனியப்பன் மற்றும் நவல்பட்டு ஊராட்சி நிா்வாகிகள், மருத்துவக் குழுவினா் உடனிருந்தனா்.

N3

Leave A Reply

Your email address will not be published.