சாக்கடைகள் தூர்வாரப்படாததால் சாக்கடை நீர் வீட்டிற்கு வரும் அவலம். தவிக்கும் புத்தூர் ஆட்டுமந்தை மக்கள்

0
D1

சாக்கடைகள் தூர்வாரப்படாததால் சாக்கடை நீர் வீட்டிற்கு வரும் அவலம். தவிக்கும் புத்தூர் ஆட்டுமந்தை மக்கள்.


திருச்சி புத்தூர் 51 வது வார்டு ஆட்டு மந்தை தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக அந்த பகுதியில் சாக்கடை நீர் தூர்வாரப்படாததால் கழிவுநீர் தொடர்ந்து வீட்டிற்குள் வருவதாகவும் நோய்த் தொற்று ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அந்த பகுதி மக்களின் கருத்து


நளினி அவர்கள் கூறியது :- நான் பிறந்ததிலிருந்து இந்த பகுதியில்தான் வசித்து வருகிறேன். மழைக்காலம் ஆனால்‌ எங்கள் பகுதியில் பிரச்சினை தான் கழிவு நீர்கள் வீட்டிற்குள் வந்து விடும். அதை வெளியே ஊற்றி ஊற்றியே எங்களுக்கு அன்றைய பொழுது போகிவிடும். இப்பொழுது சாக்கடை தூர்வாரப்படாததால் கடந்த மூன்று வருடங்களாக சாக்கடை நிறைந்தாலே வீட்டிற்குள் தண்ணீர் வந்து விடுகிறது.

D2
N2

சரஸ்வதி அவர்கள் கூறுகையில் 9.9.2020 அன்று பெய்த மழையில் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்தது. நேற்று இரவு முழுக்க தூக்கமே இல்லை. குழந்தைகளை பக்கத்து வீட்டு மாடிகளில் படுக்க வைத்து இருந்தோம். சாக்கடையை தூர்வார கோரி பலமுறை மனுக்களை அளித்து இருக்கிறோம். உதவி ஆணையர், ஜெய், என்று அனைவரிடமும் மனுக்களை கொடுத்தும் வேலை ஆகவில்லை. மேஸ்திரி இடமும் பலமுறை கூறியிருக்கிறோம். யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. போன வாரம் பெஞ்ச மழை எப்ப என் திருச்சி மீடியால லைவ் போட்டாங்க அதை பார்த்து வேலை நடந்துச்சு. பாதி வேலையோட விட்டுட்டு போய்ட்டாங்க அதுக்கப்புறம் உள்ள இன்னும் வேலை நடக்கவில்லை.

பழனி அவர்கள் கூறுகையில் எல்லோரும் வந்து பார்த்துட்டு மட்டும் போறாங்க ஆனால் யாரும் எங்க கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்கல. இந்தப் பகுதியில் சில பேருக்கு யானைக்கால் இருக்கு, ஏற்கனவே கொரோனா காய்ச்சல் பயத்தில மக்கள் இருக்கிற நிலையில தற்போது கொசுத்தொல்லையும் அதிகமாயிருச்சு. தற்போது சாக்கடை நீரால் அதிகமா நோய்தொற்று ஏற்படுது. அதனால குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுது. போனவாரம் புல்டோசர் வைத்து சுத்தம் பண்ணினாங்க,
சரிஆட்டு மந்தை உள்புறம் உள்ள பெரிய சாக்கடையும் சுத்தம் செய்வார்கள் என்று நினைத்தோம் ஆனால் பெரிய அளவில் ஒன்றும் நடக்கவில்லை. இந்தக் கால்வாயை ஆறுமாதத்திற்கு ஒரு வாரம் ஒருமுறை தூர்வார வேண்டும். இல்லை என்றால் சாக்கடை நீர் நிறைந்து வெளியே வந்துவிடும். மேலும் வரக்கூடிய காலம் மழைக் காலம் என்பதால் அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது கொசுத்தொல்லை அதிகமாக இருப்பதால் மருத்துவ முகாம்களை ஏற்படுத்தி மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்க வேண்டும்.

அந்தப் பகுதி ஜெய்யிடம் அது பற்றி கேட்கும்பொழுது அந்தப் பெரிய திறந்த வெளி சாக்கடை உள்ள பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல முடியாததால் இயந்திரங்கள் இன்றியே பணியாற்ற வேண்டியுள்ளது. சில ஆக்கிரமிப்புகளும் அந்த பகுதியில் உள்ளது. வெளிப்புறச் சாக்கடை பணிகள் முடிந்து விட்டது ஆட்டு மந்தை தெருவின் உள்புற சாக்கடை பணிகள் விரைவில் முடிந்து விடும் என்று கூறினார்.

N3

Leave A Reply

Your email address will not be published.