கோவிட் 19 கொரொனா நோய்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இலவசமாக ஹோமியோபதி மருந்து வழங்கல்

0
D1

கோவிட் 19 கொரொனா
நோய்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள
இலவசமாக ஹோமியோபதி மருந்து
வழங்கல்

கோவிட் 19 கொரொனா
நோய்தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள ஆர்சனிக் ஆல்பம் 30 C ஹோமியோபதி மருந்தை
யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, தவிர்க்க உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ‘ஆர்சனிக் ஆல்பம் 30 C என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.
கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில்,
நாள்தோறும் பத்து முறை கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை கழுவுதல்,
முக கவசம் அணிதல், சமூக இடைவெளி என மத்திய, மாநில அரசுகள் கூறியுள்ள சுகாதார நடவடிக்கைகள் பின்பற்ற வேண்டும்.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ‘ஆர்சனிக் ஆல்பம் 30C
(arsenic album 30C) என்ற மருந்தை எடுத்துக்கொள்ள மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, ஆர்சனிக் ஆல்பம் 30C
(arsenic album 30C) என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலை மட்டும் பெரியவர்கள் 4,
சிறியவர்கள் 2 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மருந்துகளை கையில் தொடாமல் உபயோகப்படுத்த வேண்டும். நாக்கில் வைத்து சுவைத்து உண்ண வேண்டும். மூன்று நாள்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையெனில்
15 நாட்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ளலாம். மேலும் மருத்துவர்கள் ஆலோசனையை பெற்று கொள்ளலாம்.
இம்மருந்தானது உடலில் நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும். இதன் மூலமாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் போது கூட அதன் பெருக்கத்தைத் தடை செய்து வெளியேற்றுவதனால் உடலை வைரஸ் தொற்றில் இருந்து காக்கிறது.

D2
N2

இந்த மருந்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளைப் போன்று ஹோமியோபதி மருந்து ரத்தத்தில் கலப்பதில்லை. நரம்பு வழியாக செயல்படக் கூடியது என ஹோமியோபதி மருத்துவர்களால் கூறப்படுகிறது.
தமிழக அரசும் அண்மையில் அறிவித்துள்ள ‘ஆரோக்கியம்’ திட்டத்தில் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.

கரோனா நோய் தொற்று நம்மை தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ‘ஆர்சனிக் ஆல்பம் 30 C மருந்தை எடுத்துக் கொள்வதன் மூலமாக நோயெதிர்ப்பு சக்தி பெறலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை’ என தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில் ஹோமியோபதி மருத்துவர் துரைராஜ் வழிகாட்டுதலில் யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் நிறுவனர் மோகன் ஏற்பாட்டில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30C ஹோமியோபதி மாத்திரைகளை இலவசமாக வழங்கி, பயன்படுத்தும் முறையினை துண்டு பிரசுரங்களாக அச்சிட்டு வழங்கினார்கள்.

மேலும் அரசு பொது மருத்துவமனை ஹோமியோபதி பிரிவில் சென்று பயன்பெற விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

N3

Leave A Reply

Your email address will not be published.