இந்த ராசிக்காரரை நம்பாதீங்க; அதிக பொய் சொல்வார்களாம்

0
full

ஜோதிடத்தில் ஒருவரது ராசியை வைத்து அவர்கள் எந்த விஷயத்தில் அதிகம் பொய் சொல்வார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்காரர்கள் தாங்கள் எதற்கும் அச்சம் கொள்ளமாட்டோம் என்று பொய் சொல்வார்கள். ஆனால் உண்மையில் இந்த ராசிக்காரர்கள் சிலந்தியைக் கண்டாலே அஞ்சுவார்கள். மேலும் இவர்கள் காதல் அல்லது திருமணம் செய்து கொள்ள மிகவும் அச்சம் கொள்வார்கள்.

poster

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் எதைப் பற்றியும் அதிகம் கவலைக் கொள்ள மாட்டேன் என்று பொய் சொல்வார்கள். ஆனால் இவர்கள் தன் கடந்த வாழ்வில் நடந்த மோசமான விஷயத்தை மறக்காமல், மனதில் மறைத்து வைத்து வெளியே கவலை இல்லாதது போல் நடிப்பார்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் உடல்நலக் குறைவு அல்லது சோர்வு குறித்து அடிக்கடி பொய் சொல்வார்கள். இந்த ராசிக்காரர்களை யாரேனும் ஒருவர் பார்த்து ஏன் இவ்வளவு மோசமாக உள்ளீர்கள் என்று கேட்டால், போதிய தூக்கம் இல்லை அல்லது அலர்ஜியின் காரணமாக என்று சமாளிப்பதற்காக பொய் கூறுவார்கள்.

கடகம்

கடகம் ராசிக்கார்கள் தங்களது உறவு குறித்து பொய் கூறுவார்கள். அதுவும் மற்றவர்கள் முன் தனது வாழ்க்கைத் துணை மிகவும் பொருத்தமானவர் போன்று சித்தரித்து காட்டுவார்கள். ஏனெனில் மற்றவர்கள் தன் துணையை வெறுக்கக்கூடாது எனபதற்காக இவர்கள் அவ்வாறு கூறுவார்கள்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பதில் பொய் சொல்வார்கள். ஆனால் வீட்டு வாடகை செலுத்த பணம் இல்லாமல் போராடும் போது, தன் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க வெட்கப்பட மாட்டார்கள்.

கன்னி

ukr

கன்னி ராசிக்காரர்கள் உதவியே தேவைப்பட்டாலும், தேவையில்லை என்று பொய் சொல்வார்கள். இவர்கள் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியும் என்று தன்னைத் தானே பெருமைக் கொள்வார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள், மன்னித்தது போல் பாசாங்கு காட்டுவார்கள் மற்றும் சண்டைகளை வெறுப்பார்கள். இதனால் கடந்த காலத்தில் யாரேனும் தனக்கு தீங்கு விளைவித்திருந்தால், ரகசியமாக அவர்களை பழி வாங்குவார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் மதுக் குடித்தல் மற்றும் எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்தோம் என்ற விஷயத்தில் பொய் கூறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு தனது வாழ்க்கை சுவாரஸ்யமாக செல்வதைப் போலவே வெளிக்காட்ட முயற்சி செய்வார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சிங்கிளாக இருப்பதையே விரும்புவதாக பொய் கூறுவார்கள். அதற்காக அவர்கள் காதலில் விழ அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்பது இல்லை. மற்றவர்கள் முன்பு சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொள்வார்கள்.

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் அனைத்தும் பெற்றிருப்பது போல பொய் சொல்வார்கள். அதேபோல் மன வலிமைப் படைத்தவர்கள் போன்றும், அமைதியானவர் போன்றும் வெளிக்காட்டிக் கொள்வார்கள். ஆனால் உண்மையில், இந்த ராசிக்காரர்கள் அவர்கள் எப்போதும் குழப்பமான மனநிலையில் தான் இருப்பார்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள், சிறு விஷயத்திற்கு தான் பொய் கூறுவார்கள். அதுவும் தனக்கு எந்த விஷயத்தை எப்படி செய்வதென்று தெரியாதது போல் நடிப்பார்கள். மேலும் தன்னை எப்போதும் பிஸியாக வெளிக்காட்டிக் கொண்டு, மற்றவர்கள் கூறும் வேலையை செய்ய தவிர்ப்பார்கள்.

மீனம்

மீனம் ராசிக்காரர்கள் அதிகமாக பொய் சொல்ல மாட்டார்கள். அப்படியே பொய் சொன்னாலும், அது மோதல்களைத் தவிர்ப்பதற்காக இருக்குமே தவிர, வேறு எதற்காகவும் பொய் சொல்லமாட்டார்கள். இதனால் நண்பர்கள் பலரும் இவர்களை வெறுக்க மாட்டார்கள்.

half 1

Leave A Reply

Your email address will not be published.