திருச்சியில் தமிழ் இலக்கியச் சேவையில் மிக நீண்ட காலம் ஈடுபட்டுள்ளவர்களில் அறிவொளியும் ஒருவர். அவரரைப்பற்றி நம்ம திருச்சியின் அடையாளம் பகுதியில் காண்போம். 1936ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தில் பிறந்தார் அறவொளி. பள்ளிப்படிப்பை நாகப்பட்டினத்தில் படித்தார்.
கல்லூரிபடிப்பை தஞ்சையில் முடித்தார். அதன் பின்னர் அரசு வேலை உட்பட பல்வேறு இடங்களில் ஆசிரியா் பணியாற்றி வந்த இவர், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். அதன்பிறகு திருச்சியில் நிரந்தமாக தங்கினார். வித்துவான் மற்றும் தமிழில் எம்.ஏ.வரை படித்திருந்த காரணத்தால் 1956ம் ஆண்டுகளில் இருந்து இலக்கிய கூட்டங்களில் பேச ஆரம்பித்தார்.
1962ஆம் ஆண்டிலிருந்து பட்டிமன்றங்களில் இவரது தமிழ்த்திறமை வெளிப்பட ஆரம்பித்தது. தேசியக்கல்லுரி பேராசிரியா் ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியா் சத்தியசீலன் ஆகிடன் இணைந்து பட்டிமன்றங்களில் பேச ஆரம்பித்தார். காரைக்குடி கம்பன் கழகம் இவர்களின் திறமைகைளை வெளிகொண்டுவரச் செய்தலில் பெரும்பங்கு வகித்தது.
பட்டிமன்றங்களில் தமிழ் பேச்சாலும் திறமையாலும் புகழ்பெற்றிருந்த குன்றக்குடி அடிகளார், அ.ச.ஞானசம்பந்தம் போன்றவர்களுடன் இவர் பட்டிமன்றங்களில் பேசியுள்ளார். கம்பராமாயணம், சிலப்பத்திகாரம், சீகசிந்தாமணி, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் படைப்புகள், உள்பட ஆயிரகணக்கான தலைப்புகளில் பட்டிமன்றங்களில் பேசியுள்ள அறிவொளி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டிமன்ற நடுவராகவும் பேசி வருகிறார்.
இவரது பட்டி மன்றங்கள் தமிழகம் தாண்டி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தமிழ் சங்கங்களில் மட்டுமல்லாது, அமெரிக்கா, கனடா, பாரிஸ், குவைத், செஷல்ஸ் தீவுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் நடந்துள்ளது.
தமிழிலில் பேசவது மட்டும்மல்லாது தமிழில் எழுதுவதிலும் வல்லவரான அறிவொளி இதுவரை எழுதியுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 103. 1974ம் ஆண்டு பாரதிதாசனின் புதிய பார்வை என்ற தலைப்பில் முதல் நூலை எழுதினார். சமீபத்தில் எழுதப்பட்ட 103வது நூலின் பெயர் யோகக் களஞ்சியம், சிவபுராணம் அனுபவ விளக்கம் என்ற நூலும், கம்பராமாயணம் முழுவதையும் நாவல் வடிவில் ஆயிரத்து 200 பக்கங்களில் இவர் எழுதிய நூலும் மிகப் பிரபலமானவை.
அறிவொளியின் குடும்பம் இதனால் மருத்துவத்தில் உள்ள ஆர்வம் காரணமாக இவர் சித்த வைத்தியம், அக்குபஞ்சா் போன்ற மருத்துவ படிப்புகளையும் இந்தியாவில் உள்ள பல்வேறு பல்கலைகழகங்கல் படித்து முடித்துள்ளார். அக்குபஞ்சர் படிப்பில் டென்மார்க்கில் உள்ள பல்கலைகழகத்தில் பி.எச்.டி ஆய்வு செய்துள்ளார். இயற்கை வைத்தியம் முறைகளில் சிகிச்சையும் அித்து வருகிறார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு இலக்கிய அமைப்புகள், தமிழக அரசு ஆகியவை பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. இலக்கிய மேடைகள் மட்டுமல்லாது, சினிமா, டி.வி.சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா். 81 வயதாகும் அறிவொளி இன்றும் பட்டி மன்றம், புத்தகங்களும் எழுதுவது, மருத்துவ சிகிச்சை என்று சுறுசுறுப்பாக பணியாற்றி இன்றைய இளைஞர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.
இவர் கடந்த 8.5.2018-ல் காலமானார்.
(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)