2021 தேர்தலுக்கான திருச்சியின் அரசியல் அலசல்

0
1

2021 தேர்தலுக்கான திருச்சியின் அரசியல் அலசல்

தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் திருச்சி அரசியல் நகர்வுகள் எப்படி அமையப் போகின்றன. வெற்றி யாருக்கு. யார் யார் கூட்டணி. திருச்சியின் அரசியல் நகர்வுகள் என்ன. திமுக கூட்டணிக் கட்சியினரின் செயல்பாடுகள். அதிமுக கூட்டணியின் நகர்வுகள். பிஜேபி முன்னெடுக்கும் அரசியல். பொது மக்களின் நிலை என்று அனைத்தைப் பற்றிய முதல் கருத்து.

2

2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கொரோனா ஊரடங்கு தமிழகத்தில் ஆறு மாதம் காலமாக பணிகளை முடக்கி விட்டது. இதனால் அரசியல் பணிகள் பெருமளவில் பின்தங்கி இருக்கின்றன என்றே கூறலாம்.தற்போதை பாஸ் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் . ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு தனது திட்டங்களையும் செயல்பாடுகளையும் வகுத்து களமிறங்க தொடங்கியிருக்கின்றன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பல்வேறு வகையான போராட்ட இயக்கங்களை முன்னெடுத்து இருக்கின்றன. திருச்சியில் திமுக ஊரடங்கு காலத்தில் நலத்திட்ட உதவிகளையும் செய்யும் பணியை பெருமளவில் முன்னெடுத்து இருக்கிறது. கே என் நேரு முதன்மைச் செயலராக பொறுப்பேற்று மாநிலம் முழுமைக்கும் பணியை மேற்கொண்டு இருந்தாலும் திருச்சிக்கு தனி கவனம் செலுத்தி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாக உள்ளது. மேலும் திருச்சி திமுகவில் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, மகேஷ் பொய்யாமொழி என்ற மூன்று மாவட்ட செயலாளர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்ளனர். மேலும் கட்சியின் நிர்வாகிகளுக்கும் ஊக்குவிக்கும் விதமாக நேரு தனது தொகுதி நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை முக்கிய நிர்வாகிகளை கொண்டு திறக்க வைத்து அவர்களுக்கான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மகேஷ் பொய்யாமொழி தனது பங்குக்கு விருவிருப்பாக தொகுதியிலும் தனது மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.


அதிமுகவோ தனது பணியில் மெத்தனமாக செயல்பட்டாலும் தற்போது பரஞ்சோதி, பா.குமார், வெல்லமண்டி நடராஜன் என்று மூன்று பேர் மாவட்ட செயலாளராக திருச்சிக்கு நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். திருச்சி புறநகர் பகுதிகளில் தற்போது அதிமுக அதிக அளவில் கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது. மாநகரில் செயல்பாடுகள் சற்று மெத்தனமாக இருக்கிறது. ஆனாலும் அதிமுக திருச்சியில் தனது தேர்தல் பணியை கட்சியில் இருந்து முதலில் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக புதிய நிர்வாகிகள் நியமனம் என்று கட்சியில் மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

பிஜேபி தனது பங்குக்கு கூட்டங்களை நடத்திக் கொண்டு போஸ்டர் விளம்பரங்கள் என்று பெரிய அளவில் விளம்பரங்களை செய்து கொண்டிருக்கிறது.

மேலும் அமமுகவும் தன் பங்குக்கு கட்சி நிர்வாகிகளின் கூட்டங்களை கூட்டியும், வார்டு வாரியாக கட்சி உறுப்பினர்களின் விவரங்களை திரட்டி வந்து கொண்டிருக்கிறது.


காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி ,விசிக போன்ற கட்சிகள் தேர்தல் பணிகளில் தற்போது விறுவிறுப்பு காட்டவில்லை என்றாலும். கட்சியின் தலைமை இருந்து செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து கொண்டிருந்தாலும் தேர்தல் பணியில் ஆர்வம் காட்டவில்லை.


நாம் தமிழர் கட்சியோகடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நின்று திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. ஆனால் இன்றோ கட்சியினர் சமூக வலை தளங்களில் இயங்கும் அளவிற்கு கூட சமூகத்தில் இயங்குவதில்லை என்பதே பரவலாக கூறப்படுகிறது.

திமுக, அதிமுக, பிஜேபி போன்ற கட்சிகள் மட்டுமே தற்போது தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. ஏனைய கட்சிகள் தேர்தலுக்கான பணியில் தற்போது விருவிருப்பு காட்டவில்லை.

திருச்சியை பொருத்தவரை திமுகவும் அதிமுகவுமே பெருவாரியான தொகுதிகளில் நிற்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு சில தொகுதிகளை மட்டுமே தரப்படும். அதனால் சிறிய அரசியல் கட்சிகள் தங்கள் விரும்பிய தொகுதிகள் வாரியாக தங்களது பணிகளை முன்னெடுத்து கூட்டணி கட்சியிடம் இருந்து அந்த தொகுதியை கேட்டு பெற்று விடலாம் என்று திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை தற்போது உள்ள கூட்டணியே தொடரும் என்று குறிப்பிடப்படுகிறது.

அந்த அடிப்படையில் பார்த்தோமென்றால் திமுக 6 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகளுக்கு 3 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டணியை பொருத்தவரை தற்போது உள்ள கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி கொண்டிருப்பதால். ஒரு சில கட்சிகள் விலகவும் ஒரு சில கட்சிகள் இணையும் வாய்ப்பு இருப்பதாகவும். இந்த அடிப்படையில் திருச்சியில் அதிமுக ஆறு தொகுதிகள் வரை நிற்கக் கூடும். மீதமுள்ள மூன்று தொகுதிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு அளிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.


திருச்சி பிஜேபி அதிமுகவுடன் இணைந்து பயணிக்கவே தப்போது விரும்புவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியோ நாடாளுமன்றத் தேர்தலில் திருநாவுக்கரசு வெற்றி பெற்றிருப்பதை குறிப்பிட்டு திருச்சி மாவட்டத்தில் ஒரு தகுதியாவது திமுக கூட்டணியிலிருந்து பெற்றுவிட வேண்டுமென்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நடிகர் கமலஹாசனால் தொடங்கப்பட்டு கடந்த நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மையம் தேர்தலுக்கு பிறகு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறது.


தேமுதிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற கட்சிகள் தாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இருந்து திருச்சியில் ஒரு சீட்டாவது எதிர்பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இப்படியாக திருச்சியில் அரசியல் கட்சிகளின் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் மக்களுடைய எண்ணம் என்ன என்பதை தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

3

Leave A Reply

Your email address will not be published.