ஸ்ரீரங்கம் நம்பெருமாளும் சென்னை ரெங்கநாதன் தெருவும்

இன்று சென்னையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த தெருவின் பெயர்.. ரெங்கநாதன் தெரு ..
இந்த தெருவிற்கு இந்த பெயர் வரக்காரணம் … நான் இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டு இருந்தது .. இந்த பெயரில் ஒருவர் அந்த வீதியில் இருந்தார் அதனால் போலும் என்று…
வருடம் 1920 …சென்னையின் புதிய வீட்டு மனைப்பிரிவுகள் தி.நகர் பகுதியில் ஆரம்பித்த போது இந்த தெருவில் முதலில் மனை வாங்கி வீடு கட்டிய ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரியின் பெயர்
துப்புல் ரங்கஸ்வாமி ஐயங்கார்…

அன்றைய சென்னை கார்பரேசன் அதிகாரிகள் யார் முதலில் வீடு கட்டுகிறார்களோ அவரது பெயரை வைப்பார்கள் .. அதற்காக துப்புல் ரங்கஸ்வாமி ஐயங்காரை அணுகிய பொது அவர் தான் தினமும் போற்றி வணங்கும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதன் பெயரை வையுங்கள் என்று எழுதி குடுத்தார்.
நம்பெருமாள் பெயரை தாங்கிய தெரு சென்னையில் புகழ் பெற்று விளங்குவது மகிழ்ச்சியே …ரங்கஸ்வாமி தெருவாக இருந்திருக்க வேண்டும்

சென்னைப்பட்டணம் என்று இதற்கு பெயர் வைபதற்கு முன்பாக எழுதி குடுக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா அன்பர்களே. ரங்கப்பட்டணம்… அதுவும் அரங்கநாதன் மீது அன்பு கொண்டு ஒரு விஜயநகர ராஜா எழுதி குடுத்து அனுப்பியது .
ஓலை கொண்டு சென்ற மண்டல அதிகாரி தனது தந்தையார் பெயரான சென்னியப்ப நாயக்கன் பெயரை வைக்க செய்தான். இல்லை என்றால் நான் ரங்கத்தில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டினம் .. என்கிற ஊருக்கு வந்து போய் கொண்டு இருப்பேன்!!!
அரங்கனின் பெருமை என்றும் அவனே நிலைநாட்டிக்கொள்வான்!!!
முகநூலில் – விஜயராகவன் கிருஷ்ணன்
(இக்கட்டுரை 2017 நம்ம திருச்சி மே இதழிலிருந்து எடுக்கப்பட்டது)
