
லாட்டரி விற்பனை செய்த 12 பேர் கைது

திருச்சி மாநகருக்கு ஒட்டப்பட்ட கோட்டை காந்தி மார்க்கெட் பாலக்கரை கண்டோன்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று முன்தினம் தீவிர ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோதமாக லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக பாலக்கரை சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர் மேலும் அவர்களிடம் லாட்டரி சீட்டுகள் மற்றும் லாட்டரி விற்பனையை ரூபாய் 60 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
