பொதுக்குழுவில் நேருக்கு புகழாரம், வாழ்த்திய ஸ்டாலின் நன்றி கூறிய நேரு

0
full

நேருவும் நேற்று நடைபெற்ற திமுக பொது குழுவும்

திமுகவின் பொதுக்குழு கூட்டம் 8.9.2020 வியாழக்கிழமை (நேற்று) காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இதில் மு க ஸ்டாலின் உடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கே என் நேரு பங்கேற்றார். கூட்டத்தில் துரைமுருகன் பொதுச் செயலாளராகவும் டி ஆர் பாலு பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பொன்முடி, ஆர் ராசா ஆகியோர் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ukr

இந்நிலையில் கூட்டத்தில் கே என் நேரு பேசுகையில் புதிய நிர்வாகிகள் வாழ்த்தும் விதமாகவும் திமுகவின் தலைவரான முக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் பேசினார். மேலும் திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டங்களையும், திருச்சிக்கு மத்திய அமைச்சராக மாநில அமைச்சராகவும் புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் செய்த திட்டங்களையும் விளக்கிப் பேசினார்.மேலும் கலைஞரைப் போல தலைவர் ஸ்டாலினும் பொறுப்பாளர்களை சிறப்பாக தேர்ந்தெடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

poster

இதை தொடர்ந்து இறுதியாக பேசிய திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் நேருவைப் பற்றி பேசும்பொழுது தீரர்களின் நகரமாம் திருச்சி நமக்கு கொடுத்த செயல்வீரர் கே என் நேரு என்று குறிப்பிட்டார்.
நேரு முதன்மைச் செயலாளராக பொறுப்பேற்ற பின் நடைபெற்ற முதல் பொதுக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இருந்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

half 1

Leave A Reply

Your email address will not be published.