தீக்குளிக்க முயன்ற வாலிபர், காப்பாற்றிய திருச்சி பத்திரிக்கையாளர்கள்

தீக்குளிக்க முயன்ற வாலிபர், காப்பாற்றிய திருச்சி பத்திரிக்கையாளர்கள்
திருச்சி வயலூர் பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற வாலிபர் அந்தப் பகுதியில் 25 வருடங்களாக குடியிருந்து வருகிறார். அவர் குடியிருக்கும் இடம் புறம்போக்கு இடம் என்று கூறி மாநகராட்சி தன்னை காலி செய்ய சொல்லி துன்புறுத்துவதாக கூறி திருச்சி அரசு மருத்துவமனை அருகே உள்ள அபிஷேகபுரம் கோட்ட வாயில் முன் தீக்குளிக்க முயன்றார்.
அப்போது அங்கு செய்தி சேகரிக்கச் சென்றிருந்த திருச்சி பத்திரிக்கையாளர்கள் உடனடியாக ஓடிச் சென்று உடலில் மண்ணெண்ணையை ஊற்றி இருந்த அஜித்குமாரின் உடலில் தண்ணீரை ஊற்றி கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி, வாலிபரை காப்பாற்றினார்.
