திருச்சி ரயில் நிலையத்தில் இறுதி கட்டத்தில் எஸ்கலேட்டர் நிறுவும் பணி

0
D1

திருச்சி ரயில் நிலையத்தில் இறுதி கட்டத்தில் எஸ்கலேட்டர் நிறுவும் பணி

தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில் சுமாா் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் செல்லும் நிலையமாக திருச்சி ரயில் நிலையம் விளங்குகிறது.

N2

இந்த ரயில் நிலைய வளாகத்தை மேம்படுத்தும் வகையில் அண்மையில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, பயணிகள் நடைமேடைகளுக்கு சென்று வரும் வகையில் 2 மற்றும் 8 ஆவது நடைமேடைகளில் நகரும் மின் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்) அமைக்கும் பணி கடந்த ஜனவரி தொடங்கி மாா்ச் வரை நடைபெற்றது. கரோனாவால் கட்டுமானப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்ட நிலையில், கடந்த சில நாள்களாக எஸ்கலேட்டா் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டதையடுத்து 90 சதத்திற்கு மேல் பணி நிறைவடைந்தது.

D2

மேலும், 2,4,6 ஆவது நடைமேடைகளிலிருந்து வயதானோா், குழந்தைகள் உள்ளிட்டோா் எளிதாக வெளியேறவும், நடைமேடைக்கு வருவதற்கும் மின்தூக்கிகள் (லிப்ட்) அமைக்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் சுமாா் ரூ. 10 கோடியில் செயல்படுத்தப்படுகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் எஸ்கலேட்டா், மின்தூக்கிகள் அமைக்கும் பணி நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வரவுள்ளன என தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

N3

Leave A Reply

Your email address will not be published.